செல்லாத பணம் – இமையம்

சாஹித்ய அகாடமி விருது பெற்ற இந்த நாவல், இமயம் அவர்களின் எழுத்தில் நான் படித்த முதல் புத்தகம்.
தொண்டங்கியதிலிருந்தே கீழே வைக்க முடியவில்லை. எதார்த்தம், எளிய நடை ஆனால் படிக்க படிக்க பல பரிமாணங்கள்.

ஒரு சம்பவம் நடக்கிறது – பெற்றோரின் சம்மதம் இல்லாமல் காதல் திருமணம் செய்யத ஒரு பெண் (ரேவதி), 6 வருடங்களுக்கு பின் தீ காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறாள். இது போன்ற சம்பவம் நாம எல்லோரும் சினிமாவில் பார்த்தோ, பேப்பர்ல படிச்சோ, இல்ல யாருக்கோ நடந்தோ கேள்விபட்டிருப்போம். இதை மய்யமாக கொண்டது தான் இந்த நாவல். தீ எப்படி ஏற்பட்டது, பின் கதை என்ன என்ற விளக்கங்களுக்குள் போகாமல் கதாபாத்திரங்களின் வழியாக என்ன பின்னணி என்று வாசகரை வியூகிக்க வைக்கிறது.

பணம் பத்தும் செய்யும் என்பது பழமொழி. ஆனால் பணம் மட்டும் இருந்தால் போதுமா? அது நமக்கு எல்லா நேரங்களிலும் கை குடுப்பது இல்லை.

ரேவதியின் அப்பா அம்மா அண்ணன் ஒரு பக்கம்… ரேவதியின் கணவன் இன்னொரு பக்கம்…. பாசம், உணர்வுகள், சிந்தனைகள் என்று மனித அனுபவத்தை அருமையாக கொண்டு வருகிறார்.